Monday, May 26, 2008

438. IPL 20-20 கிரிக்கெட் - தாதா,சென்னை,தோனி,லட்சுமி ராய் ...

IPL கிரிக்கெட் ஆட்டங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தாலும், ஆபீஸ் வேலை சற்றே கடுப்படிப்பதாலும், தோள்பட்டை சம்பந்தப்பட்ட ஒரு புது வியாதி (Peri Arthritis) என்னை பாடாய் படுத்துவதாலும், குறிப்பிடத்தக்க சில IPL ஆட்டங்கள் (மும்பை அணியை ஒரு ரன்னில் மொஹாலி அணி வென்ற ஆட்டம் போல...) பற்றி பதிவெழுத முடியாமல் போனது.

கொல்கத்தா - மொஹாலி அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில், பாய்காட் அவரை 'பிரின்ஸ் ஆப்ஃ கல்குட்டா' என்றழைப்பதற்கும், பெங்காலியர்கள் அவரை 'தாதா' என்று மாய்ந்து போவதற்கும் ஆன காரணத்தை விளக்கும் வகையில் கங்குலி ஓர் அதிரடி ஆட்டம் ஆடியதில்,(மிக உறுதியான!) தோற்கும் சூழலிலிருந்த கொல்கத்தா, கடைசி 5 ஓவர்களில் 71 ரன்களை ஈட்டி அபார வெற்றி பெற்றது.

Ganguly's final assault literally turned the match on its head ! இர்பான் பதான் வீசிய இறுதி ஓவரில் கங்குலியின் விளாசல், வெற்றிக்குத் தேவையான 15 ரன்களை (இதில் 2 சிக்ஸர்கள்) நான்கே பந்துகளில் பெற்றுத் தந்தது. ஈடன் கார்டன் அரங்கில் எழுந்த பேரிரைச்சல், எரிமலை வெடித்தது போல இருந்தது. இந்த மகத்தான வெற்றியின் மூலம் கொல்கத்தா அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை என்றாலும், "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்பது கங்குலிக்குப் பொருந்தும் !!!

சனிக்கிழமை நடந்த சென்னை-ஜெய்ப்பூர் ஆட்டமும் விறுவிறுப்பாக இருந்தது. ஜெய்ப்பூரின் 211 ரன்களை சென்னை அணி சிறப்பாகவே 'துரத்தியது', ஆனாலும், 201 ரன்கள் எடுத்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்திலும், (கொல்கத்தா-மொஹாலி ஆட்டம் போலவே!) கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் சென்னைக்கு வெற்றி என்ற நிலை இருந்தது. கங்குலியைப் போல நமது கேப்டன் தோனி கடைசி வரை நின்று ஆடவில்லை என்பது பெரிய குறை. தோனிக்கு லட்சுமி ராயை சந்திக்க வேண்டிய அவசரம் போலும் ;-) முக்கியமான கட்டத்தில், 18-வது ஓவரில் விக்கெட்டை பறி கொடுத்து விட்டார் !!! கிரிக்கெட் பற்றி ஒரு இழவும் தெரியாத லட்சுமி ராய் மற்றும் சில கோலிவுட் குமரிகள் சேப்பாக்கம் பக்கம் வராமல் இருந்திருந்தால், தோனி நிதானமாக ஆடியிருப்பாரோ ????

சனிக்கிழமை நடந்த 2-வது IPL ஆட்டத்தில் (மும்பை vs தில்லி) மும்பை வென்றிருந்தால், சென்னைக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். அன்றே அரை இறுதிக்கு (ஐதராபாதுடனான அடுத்த ஆட்டத்தில் நாம் தோற்றாலும் கவலையில்லை!) சென்னை தகுதி பெற்றிருக்கும் ! தில்லிக்கு ஆடும் தமிழ்நாட்டுக்காரர் தினேஷ் கார்த்திக் தனது 15 நிமிடப் புகழுக்கு அந்த தினத்தை தேர்வு செய்ததில், மும்பை மண்ணைக் கவ்வி, அரை இறுதித் தேர்வுக்கு, நமது மற்றும் மும்பை அணிகளின் வாய்ப்பு கவலைக்கிடமாகி விட்டது !!! சென்னையின் இந்த ரெண்டுங்கெட்டான் நிலைமைக்குக் முக்கியக் காரணம், ஜெயிக்க வேண்டிய (பெங்களுருக்கு எதிரான) ஆட்டத்தில், உயிரைக் கொடுத்து தோற்றது தான், chennai snatched Defeat from the Jaws of Victory :( அந்த ஆட்டத்திற்கும் லட்சுமி ராய் வந்திருந்து தையத்தக்கா என்று குதித்ததில், தோனி சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது !!!

சென்னையின் நெட் ரன்ரேட் மைனஸில் இருப்பதால், ஐதராபாதுடனான அடுத்த ஆட்டத்தில் நாம் வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்கு தகுதி பெறலாம். இல்லையெனில், மும்பை அடுத்த 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும் என்று ஒம்மாச்சியை வேண்டிக் கொள்ளலாம் :)

எ.அ.பாலா

5 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

பினாத்தல் சுரேஷ் said...

ஐயா, இதெல்லாம் உமக்கே டூ மச்சாத் தோணலையா? சென்னை டீம்கிட்டே பேட்டிங்கும் கிடையாது (மார்க்கல் தவிர்த்து) பௌலிங்கும் கிடையாது (எப்பவாச்சும் கோனி நிட்னி பாலாஜி - ஆளுக்கொரு மேட்ச்தான்!).. தோக்கறதுக்கு அப்பாவி லட்சுமிராயைக் காரணமாச் சொல்றீங்களே? அந்தப் பால் வடியும் முகத்தைப் பாத்தீங்களா? ;-)

கங்குலி அடி அருமை..

மும்பை இன்னிக்கு அடி நிச்சயம்.. ஆனா நாளைக்கு?

வந்தியத்தேவன் said...

//சென்னையின் இந்த ரெண்டுங்கெட்டான் நிலைமைக்குக் முக்கியக் காரணம், ஜெயிக்க வேண்டிய (பெங்களுருக்கு எதிரான) ஆட்டத்தில், உயிரைக் கொடுத்து தோற்றது தான், chennai snatched Defeat from the Jaws of Victory :( அந்த ஆட்டத்திற்கும் லட்சுமி ராய் வந்திருந்து தையத்தக்கா என்று குதித்ததில், தோனி சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது !!!//

இது உண்மைபோல் தான் இருக்கின்றது. 6கோடிக்கு விலைபோன டோணி வெல்லவேண்டிய பல மேட்ச்களை லட்சுமிராய் போன்றவர்களால் கோட்டை விட்டிருக்கின்றார். சென்னைக்கு அரையிறுதி கனவுதான்.

enRenRum-anbudan.BALA said...

ஐயா பினாத்தலாரே,

//தோக்கறதுக்கு அப்பாவி லட்சுமிராயைக் காரணமாச் சொல்றீங்களே? அந்தப் பால் வடியும் முகத்தைப்
பாத்தீங்களா? ;-)
//
சென்னை அணியின் மேல் உள்ள அதீத வாஞ்சை தான், லட்சுமி ராயின் பால் வடியும் முகத்தையும்
மீறி அவர் மேல் கோபம் கொள்ள வைத்து விட்டது ;-) உங்கள் பின்னூட்டம் கண்டவுடன் என்
தவறை உணர்ந்து விட்டேன் :)
//சென்னை டீம்கிட்டே பேட்டிங்கும் கிடையாது (மார்க்கல் தவிர்த்து) பௌலிங்கும் கிடையாது
//
அப்படியெல்லாம், சென்னை அணியை மட்டமாக எடை போட வேண்டாம் ! ராஜஸ்தான் ராயல் அணியுடன் (தோற்றாலும்) சிறப்பாக ஆடி, 201 ரன்கள் எடுக்கவில்லையா என்ன ? முரளி விக்கெட் அதிகம் எடுக்காவிட்டாலும், எகனாமிக்கலாக பந்து வீசுகிறார், Gony is a real find, பாலாஜியின் (மொஹாலிக்கு எதிரான) ஹாட்ரிக் சாதனையும் பாராட்டுக்குரியது.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

வந்தியத்தேவன்,
சென்னை அரைஇறுதிக்கு தகுதி பெறுவது கனவு என்றெல்லாம் நினைக்காதீர்கள் ! இன்று
ஐதரபாதை வென்று ஜம்மென்று அரைஇறுதிக்கு சென்று விடுவார்கள் என்று நம்புவோம் :) ஆனால்,
லட்சுமி ராய் அரைஇறுதி போட்டியைப் பார்க்க, மும்பை செல்லாமல் இருக்க வேண்டும் என்று
கடவுளை வேண்டிக் கொள்ளவும் ;-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails